தமிழ் (Tamil)

எம்மைப் பற்றி

Tenants Victoria (டெனன்ஸ் விக்டோரியா) என்பது விக்டோரியாவில் வீடொன்றை வாடகை கொள்வோருக்கான ஓர் இலவச, இரகசியம் பேணும் சேவையாகும். வாடகை கொள்வோர் தமக்கு உதவிக் கொள்ள உதவுவதற்காக நாம் பல்வேறு மொழிகளில் தகவல்களையும் ஆலோசனையையும் வழங்குகிறோம்.

Tenants Victoria (டெனன்ஸ் விக்டோரியா) செய்யக்கூடியவை:

  • உங்களது வாடகை கொள்ளலுடன் தொடர்பான படிவங்களை அல்லது ஒப்பந்தங்களை நிரப்ப உங்களுக்கு உதவுதல்
  • உங்களது குறிப்பான பிரச்சினைகளைப் பற்றி ஆலோசனை வழங்குதல், உதாரணமாக பழுது பார்த்தல், வாடகை அதிகரிப்பு
  • உங்களது நிலக்கிழாருடன் அல்லது மெய்ச் சொத்து முகவரிடம் உங்கள் சார்பாக பேச்சுவார்த்தை நடத்துதலும் சார்ந்து பேசுதலும்
  • VCAT (விக்டோரிய குடிமை, நிருவாக நியாய சபை) இல் உதவுதல் அல்லது உங்களைப் பிரதிநிதித்துவம் செய்தல்
  • வாடகை கொள்வோரின் உரிமைகளைப் பற்றி உங்களது சமுதாயக் குழுவிடம் பேசுதல்

 

தொலைபேசி மூலம் குத்தகைதாரர்களுக்கான சட்ட ஆலோசனை: 1800 068 860

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை

தேசிய மொழிபெயர்ப்பாளர் சின்னம்

நீங்கள் உங்கள் சொந்த மொழியைப் பேச விரும்பினால், தயவுசெய்து உங்கள் பெயர், உங்கள் மொழி மற்றும் உங்கள் தொலைபேசி எண்ணை எங்களிடம் கூறுங்கள். ஒரு மொழிபெயர்ப்பாளருடன் நாங்கள் உங்களை மீண்டும் அழைப்போம்.

 

covid-19 தகவல்

கொரோனா வைரஸ் நோய் (COVID-19) பற்றிய தகவலுக்கு பார்க்க:

 

குத்தகைதாரர்களுக்கான சட்ட உரிமைகள்

சட்ட உரிமைகள் குறித்த பக்கங்கள் எல்லா மொழிகளிலும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க

(please note that pages on legal rights are not available in all languages)

Tenants Victoria acknowledges the support of the Victorian Government.